Saturday, November 7, 2009

ஒரு மோதிரம் இரு கொலைகள்



சமீபத்தில் கிழக்குப் பதிப்பகம் வெளியிடும் ”ஒரு மோதிரம் இரு கொலைகள் ” நாவலை படிக்க நேர்ந்தது.

கதை சுருக்கம் :-
கொலை நடக்கிறது அதை துப்பு துலங்க வருகிறார் ஷெர்லாக், அதன் பின் மீண்டும் ஒரு கொலை நடக்கிறது, அதை தன் திறமையால் எப்படி கண்டறிகிறார் என்பதே ”ஒரு மோதிரம் இரு கொலைகள் ”

விமர்சனம் :-
நம் தமிழ் நாவல்களை படித்தவர்கள் எளிதாகவும், புதிதாக நாவல் படிப்பவர்கள் சற்று பொறுமையாக படித்தால், அனைவருக்கும் ஆனந்தம் தரும் இனிய நாவல் இது. முதலில் நான் ஆங்கில நாவலே படித்ததில்லை (சற்று புரியாது). இந்த நாவலை அருமையாக மொழிபெயர்ப்பு செய்துள்ள பத்ரி சேஷாத்திரி அவர்களுக்கும், வெளியிட்ட கிழக்குப் பதிப்பகத்தாருக்கும் நன்றிகள்.

நறுக்குத் தெரித்த வசனங்கள், அமைதியான அறிமுகம் என ஆரம்பிக்கும இக்கதையில் வர்ணனை மற்றும் கதை செல்லும் பாங்கு ஓர் ஆங்கில படத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்ப்படுத்தியது. துப்பறிதலின் எல்லையை காண்பித்துள்ளார்கள், நமக்கு இது ஒரு புதிய பரிணாமம். அதிகம் சிந்திக்கத் தெரிந்த மனிதனின் செயல்களை குற்றத்தை ஆராய்பவராக முதலில் நமக்கு காட்டிவிட்டு கதைக்கான முடிவாக அவரின் மன எண்ணங்களை கொண்டு குற்றத்தை எப்படி கண்டுபிடித்தார் என்று சொல்கிறார்கள்.

அங்கேயும் போலிஸை சந்தோசமாக கிண்டலடிக்கிறார்கள். 18 ம் நூற்றாண்டு கால கதை என்பதால் சுவரஸ்யமாக இருக்கிறது. கொலை நடந்த இடத்தில் மற்றவர்களை தவிர போலிஸ் சாதாரணமாகத்தான் இருப்பார்கள்(நிறைய பார்த்த அனுபவம்) ஆனால் சிரித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால்
ஷெர்லாக் சற்று ஆயாசமாக, புன்சிரிப்புடன் கொலையை ஆராய்வதாக வருவது அவரின் தனித்தன்மயை காட்டுகிறது.

தேவையற்ற விசயங்களை புத்தியில் ஏற்ற வேண்டாம் என்பதின் விளக்கம் கதையில் போகப் போகப் புரிகிறது. கொலைக்கு காரணமானவர்களின் சிறிய வட்டத்தை கூட
ஷெர்லாக் அதிகம் அலட்டவில்லை. ஒரு மனிதனின் காலடித்தடங்களை வைத்து அவனது உயரத்தைக் கூற சற்று அனுபவம் வேண்டும். மேலும் குதிரையின் காலடித்தடதை வைத்து அதன் லாடங்களை பற்றிச் சொல்லியிருப்பது புதுமை.

ஷெர்லாக் கொலைக்கான காரணத்தை ஆராயும் போது ஏற்படும் சிறு கோபம், ஏமாற்றம் அதை பற்றி அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருப்பது, சோர்ந்து போகாமல் வேலையை தொடர்வது நமக்கு ஒரு படிப்பினை. அதிர்ஷ்டவசமாக கொலைகாரனை கண்டுபிடித்ததாக அல்லாமல், அதற்க்காக அவர் மெனக்கெட்டிருப்பது அவரின் இரண்டாம் பாகத்தில் தெரிகிறது.

இரண்டாம் பாகம் :-

கொலைக்கான காரணத்தையும், அதை கண்டுபிடித்ததை ஒரிரு பக்கத்தில் முடிக்காமல் கதையின் அடி வேர் வரை தொட்டிருக்கிறார். பின் பகுதியில் அனைத்து விசயங்களையும் சொல்வதர்க்கு அதிக பக்கங்கள் எடுத்த இடத்தில் காதலுக்கு சற்று அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும். ஆனாலும் இதில் வாசகர்கள் திருப்தி அடைய நிறைய விசயங்கள் உள்ளன. பழிவாங்கும் உணர்சியை சற்று ஆழமாக அதற்க்கான காரணங்களை ஆணித்தரமாக சொல்லப்பட்டுள்ளது.

ஒரு மனிதனின் வாழ்நாள் சந்தோசமாக எண்ணியது கிடைக்கவில்லை என்றால் அதற்க்காக அவன் தன் வாழ்நாளையே பணயமாக வைப்பது அரிது. என்னை பொறுத்தவரை கதையில் இரண்டு நாயகர்கள் ஒவ்வொரு பாகத்திலும்.

முடிவு :-
நல்ல கதை எந்த மொழியானாலும் பாரட்டியே தீரவேண்டும், அந்த வகையில் இந்த நாவல் ஒரு பொக்கிஷம். ஆனால் சில பேர் தங்களுடைய விமர்சனங்களில் தமிழ் நாவல் எழுத்தார்களை குறை சொல்லியிருப்பது ஏற்க்கக் கூடியதல்ல.

மொத்தத்தில் இந்த நாவல் நல்ல ஒரு வித்தியாசத்தை பூர்த்தி செய்து மன நிறைவத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு படித்து மகிழுங்கள்.

ஒரு மோதிரம் இரு கொலைகள்
ஆர்தர் கோனன் டாயில்,
தமிழில்: பத்ரி சேஷாத்ரி
விலை: ரூபாய் - 120
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
புத்தகத்தை வாங்க: http://nhm.in/shop/978-81-8493-142-6.html







1 comment:

Unknown said...

அன்புடையீர்,
தாங்கள் மொழி பெயர்த்துள்ள 'ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறிகிறார்: ஒரு மோதிரம், இரு கொலைகள்' நாவலில் அதன் ஆசிரியர் ஆர்தர் கோனன் டாயில் பற்றி தாங்கள் தந்துள்ள தகவல்கள் சரியானவை அல்ல என்று டாக்டர் ஞானப்ரகாசம் (முன்னாள் துணைவேந்தர்) தனது ப்ளாக்கில் (http://www.vetpractice.blogspot.com/) குறிப்பிட்டுள்ளார். கவனித்தீர்களா? அதற்கு தங்கள் பதில் என்ன? என்று அறிய ஆவல்.

சபாபதி
சென்னை

வருகைக்கு நன்றி!

...