
தினமும்
இரவில்
அதுவும்
கனவில்
களம்
காண்கிறேன்
விடியலில்
நீ விதைத்த
காலடி
விதைகளுக்கு
தினமும்
நீருற்றுகிறேன்
நீ கைவீசி
நடந்து
விட்டுச் சென்ற
இடத்தில்
இளைப்பாறுகிறேன்
எதிரே தூசிக்
காற்று
வந்தது
கண்களை
மூடிக் கொண்டாய்
பிறகு ஏன்
நான் வரும்
போதும்...?
நீ பார்வை
இடும்
இடங்களில்
நிறைய
தடவை
என்னை
வலுக்கட்டாயமாக
திணித்திருக்கிறேன்
உன் யதேச்சையான
விழிக் கதிர்கள்
கூட
என் மேல்
விழாதவாறு
மிகக்
கவனமாய் நீ
எனது
இதய செல்
உன் பார்வை
எனும் சிக்னல்
இல்லாமல்
செயலிழக்கிறது
நிமிர்ந்த நடை
நேர் கொண்ட
பார்வை
சில
சமயங்களில்
நீ பாரதியை
மறந்து போக
வேண்டும்
உனக்குத்
தெரியாமல்
ஒற்றை
ஆளாய் உன்னுடன்
போரிட்டுக்
கொண்டிருக்கிறேன்
நேருக்கு
நேர் - நீ
என் விழி
மோதி
நாமிருவரும்
போர்க்களம்
காணும் நாள்
வெகு தொலைவில்
இல்லை
-போரில் புறமுதுகு காட்டாதவன்
