Monday, January 18, 2010

போர்க்களம்


தினமும்
இரவில்
அதுவும்
கனவில்
களம்
காண்கிறேன்

விடியலில்
நீ விதைத்த
காலடி
விதைகளுக்கு
தினமும்
நீருற்றுகிறேன்

நீ கைவீசி
நடந்து
விட்டுச் சென்ற
இடத்தில்
இளைப்பாறுகிறேன்

எதிரே தூசிக்
காற்று
வந்தது
கண்களை
மூடிக் கொண்டாய்
பிறகு ஏன்
நான் வரும்
போதும்...?

நீ பார்வை
இடும்
இடங்களில்
நிறைய
தடவை
என்னை
வலுக்கட்டாயமாக
திணித்திருக்கிறேன்

உன் யதேச்சையான
விழிக் கதிர்கள்
கூட
என் மேல்
விழாதவாறு
மிகக்
கவனமாய் நீ

எனது
இதய செல்
உன் பார்வை
எனும் சிக்னல்
இல்லாமல்
செயலிழக்கிறது

நிமிர்ந்த நடை
நேர் கொண்ட
பார்வை
சில
சமயங்களில்
நீ பாரதியை
மறந்து போக
வேண்டும்

உனக்குத்
தெரியாமல்
ஒற்றை
ஆளாய் உன்னுடன்
போரிட்டுக்
கொண்டிருக்கிறேன்

நேருக்கு
நேர் - நீ
என் விழி
மோதி
நாமிருவரும்
போர்க்களம்
காணும் நாள்
வெகு தொலைவில்
இல்லை


-போரில் புறமுதுகு காட்டாதவன்

Monday, November 16, 2009

விளையாடாமல் ஒரு ரன் அவுட் !


பெயரோ
”தாக்ரே”
வார்த்தைகள்
தடித்து
இப்போது
தாக்குதே

நீங்களே
பந்து
போட்டு
விழுந்து
விட்டது
உங்கள்
விக்கெட்டு

முந்தின
தேர்தலில்
முக்காடு-வரும்
தேர்தலில்
எதிரொலிக்கும்
இந்த
நாவடு

தப்பான
வார்த்தகளை
விட்டு
நீங்களே
உங்களுக்கு
வைத்தது
இந்த
வேட்டு

எங்கள்
சச்சினின்
புகழும்
மட்டையும்
ரொம்ப
வெயிட்டு
உங்கள்
அரசியல்
வாழ்க்கைக்கு
விரைவில்
வரும்- பெரும்
பூட்டு

சச்சினுக்கு
இல்லை
ஹெட் வெயிட்டு
தாக்ரேவே
நீ
இந்தியனா
என்று
காட்டு?

இப்படிக்கு
- அம்பயர்

Friday, November 13, 2009

உனக்குள் நான்


யுத்தமில்லை
இரத்தமில்லை
ஆராத
காயமானது
எனக்கு
உன் ஆயுத
விழிகளால்

நீ சுடவுமில்லை
எரிக்கவுமில்லை
ஆனால்
சாம்பலானது
என்
மனது

நீ தூண்டிலிடவில்லை
வலை விரிக்கவிலை
அனால்
உனக்குள்
சிக்கிக் கொண்டது
நான்

நீ தொலைக்கவில்லை
தேடவில்லை
ஆனால்
கண்டறியப்பட்டேன்
நான்

நீ எழுதவில்லை
அடித்து
திருத்தவில்லை
உன்
பெயருக்குப் பின்னால்
என் பெயர்

நீ பேசவுமில்லை
சிரிக்கவுமில்லை
ஆனால்
அடிக்கடி
உன்
உதடுகளுக்கிடையே
நான்

நீ பயணப்படவில்லை
பழக்கமாகவில்லை
ஆனால்
பணயமானது
நான்

நீ சுட்டிக்காட்டவில்லை
தேர்ந்தெடுக்கவில்லை
உன்னை
அறியாமல்
உனக்குள்
நான்

இப்படிக்கு
-உன் விழிகளால் தேடப்படுபவன்

வருகைக்கு நன்றி!

...