Thursday, July 7, 2011

முதுமலை - மைசூர் - பெங்களூர்

 Mudumalai Tour

தேனியிலிருந்து என்னுடைய பிளான் இதுதான்

Theni–Mudumalai –Mysore-Bangalore- Theni (1100 KM)

உண்மையிலே முதுமலை போகாமல் மைசூர் சென்றால் 50 கிமீ குறையும் அவ்ளோதான், அதனால்தான் முதுமலையும் சேர்த்து இழுத்துக் கொண்டோம். மேற்கண்ட சுற்றுலாவிற்க்கு 3 நாட்கள்தான், மேலும் ஒரு நாள் சேர்த்தால் ஊட்டியையும் சுற்றிவிட்டு வரலாம்(பட்ஜெட் தாங்காது என்பதால் நாங்கள் ஊட்டியை கழட்டிவிட்டோம்)

தேனி-மேட்டுப்பாளையம்-ஊட்டி வரை 300 கி.மீ, இரவு 10.30 மணிக்கு கிளம்பி காலை 7 மணிக்குள் முதுமலையை அடைய வேண்டும், அப்போதுதான் யானை சபாரி செல்ல முடியும்.அதனால் எங்களது குவாலிஸ் வண்டியில் கிளம்பினோம்.

கிளம்பியவுடன் அரட்டை தொடங்கி செம்பட்டி வரை வலுத்தது, பிறகு எல்லாரும் தூங்கி விட்டனர், நான் வண்டியை ஓட்டிக் கொண்டு டிரைவருடன் பேசிக் கொண்டே வந்தேன். எங்களது வண்டி டி போர்டு ஆகையால் தேனியிலே பெர்மிட் எடித்திருந்தோம். இரவு நேரத்தில் எதற்க்கு ரிஸ்க் என்று, ஆனால் அதற்க்கு வேலையே இல்லை என்பது வேறு விசயம்.மேட்டுப்பாளையத்தில் டீ அடித்து விட்டு ஊட்டி நோக்கி பயணமானோம், வெயில் காலம் என்பதால் ஊட்டியில் குளிர் கம்மியாகவே தெரிந்தது.

ஊட்டியை காலை 5.30 க்கு அடைந்தோம். ஏற்கனவே மசினகுடி பாதை ஆபத்தானது என்றும் கேட் 7 மணிக்குத்தான் திறப்பார்கள் என்றும் படித்திருந்தால் கூடலூர் வழியாக முதுமலை சென்று விடலாம் என நினைத்திருந்தேன்,ஆனால் ஊட்டியில் வாகனங்களில் ஆட்களை ஏற்றிக் கொண்டு மசினகுடி வழியாக ஏராளமான வாகனக்கள் சென்றது(வண்டியில் சென்றவர்கள் தேயிலை அல்லது கூலி வேலைக்கு செல்பவர்கள்) மேலும் கூடலூர் வழியே முதுமலை செல்வது 30 கிமீ அதிகம், எனவே முடிவை மாற்றி மசினகுடி வழியாக பயணித்தோம்...


பனரோமா சாட் மூலம் எடுக்கப்பட்ட படங்கள்




வண்டியை 2 கியரிலும், பிரேக்கை அழுத்திக் கொண்டே சென்றாதாலும் டயர் சூடாகி விட்டது இந்த மசினகுடி 36 கொண்டை ஊசிகள் கொண்டது, ஒரு வழியாக பாஸ் செய்து மலைப்பாதையை கடந்து நார்மல் ரோட்டிற்க்கு வந்தோம்

மான் மற்றும் மயில் பார்க்க முடிந்தது, எங்களுக்கு முன்பு ஒரு சில வண்டிகளே சென்றது, நாங்கள் லேட் என்று நினைத்தோம், உண்மையில் முதுமலையில் கூட்டம் குறைவு.


லேட்டாகி விட்டதால் யானை சபாரி முடிந்து விட்டது என்றார்கள், பிறகு அவர்கள் பாரஸ்ட் வேனில் ட்ரிப் அடித்து சில விலங்குகளை பார்த்தோம்...

நாம் முதுமலை வருகிற வழியிலே (அதிகாலை வந்தால்) சில விலங்குகளை பார்க்கலாம். பாரஸ்ட் வண்டியில் செல்வது வேஸ்ட், இதில் விலங்குகளை நாம் காண்பது நம் அதிர்ஸ்டம் என்ற போர்டு வேறு, விலங்குகளை பார்க்க முடியாமல் திரும்பும் நபர்களுக்கு வரும் வழியிலே யானை ஒன்றை கட்டிப் போட்டிருக்கிறார்கள்..
காலை சிற்றுண்டியை தமிழ்நாடு ஹோட்டலில் முடித்தோம். யானைகள் முகாமில் யானைகள் இல்லை.அங்கிருந்து கிளம்பி தமிழ்நாட்டு எல்லையை தாண்டி கர்நாடக எல்லைக்குள் நுழைந்தோம் (மைசூர் ரோடு) வழியில் தெப்பக்காட்டிலிருந்து ஹிம்மவாடு கோபலசுவாமி கோவிலுக்கு வந்தோம்

கோபால சுவாமி கோவில்
மலை மேல் இருக்கும் கோபால (பெருமாள்) கோயில் சோழ அரசனால் கட்டப்பட்டது கோவில் காலை 8.30 முதல் மாலை 5 மணி வரை, டோல்கேட் ரூ 100 (ஒரு காருக்கு) ஒரு மணி நேரம் மட்டும் அனுமதி என்றார்கள் ஆனால் மலைப் பாதையில் இது சாத்தியமில்லை நாங்க 2 மணி நேரம் கழித்துத்தான் வந்தோம் ஒன்றும் சொல்லவில்லை.

கோவில் அருமையாக இருந்தது, அங்குள்ள பூசாரி கோவிலை பற்றி அனைவருக்கும் சுருக்கமாக சொல்கிறார்

பெருமாள் கோவில் என்பதால் வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
கோவிலை முடித்துக் கொண்டு அங்கிருந்து 57 கி.மீ தொலைவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு கிளம்பினோம்.
நஞ்சுண்டேஸ்வரர் கோவில்
நஞ்சன்குடு என்ற ஊரில் இருக்கிறது இந்த சிவன் கோவில்.
கோவில், காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். கோவிலுக்கு அருகிலே சிவன் சிலை ஒன்று பெரிய அளவில் இருக்கிறது


தரிசனம் முடித்து மைசூர் சென்றோம், கோவிலிருந்து மைசூர் 24 கி.மீ. மைசூரில் மும்பை டிப்பன்ஸ் என்ற ஓட்டலில் தங்கினோம், நன்றாக இருந்தது, அறை வாடகையும் அதிகமில்லை, மேலும் ஒரு வாரத்திற்க்கு முன்பே போனிலே ரூம்கள் புக் செய்யப்பட்டது, ரூம் புக்கிங்கிற்க்கு எவ்வித கட்டணமில்லை.
இரண்டாவது நாள் : மைசூரை சுற்றிப்பார்ப்பது

மைசூர் விலங்குகள் காப்பகத்திற்க்கு (காலை 8.30 முதல் மாலை 5.30 வரை செவ்வாய் விடுமுறை) செல்லும் வழியில் டூர் கெய்டுகள் வேண்டுமென்றே காப்பகம் 10 மணிக்குத்தான் திறப்பார்கள் என்று டுவிஸ்ட் செய்தார்கள், நான் ஏறகனவே வெப்பில் பார்த்ததால் 8.30 மணிக்கே உள்ளே சென்று விட்டோம் காப்பாகம் சுமார் 4 கி.மீ சுற்ற வேண்டும், குட்டீஸ்களுக்கு ஆனந்தமான ஒன்று, இந்த டூர் போடக் காரணமே குட்டீஸ்கள், என் சிறு வயதிலே வீரபாண்டி திருவிழாவில் சர்க்கஸ் போடும் போதுதான் விலங்குகளை பார்த்தேன், ஆனால் இப்போதுள்ள பிள்ளைகள் டீவியில் பார்த்ததோடு சரி ஆகவே இந்த காப்பகத்தில் குட்டீஸ்களுக்குத்தான் எல்லாம்...


இவரோட சேட்ட தாங்க முடியல கேமராவுக்கு வெட்கப்பட்டு போஸ் கொடுத்தார்




காப்பகத்திற்க்கு முதியோர்கள் சுற்றி பார்க்க பேட்டரி கார் உள்ளது ஒரு நபருக்கு ரூ100, காப்பகத்தை சுற்றிப் பார்த்து விட்டு பேலஸ் சென்றோம். பிறகு மாலையில் பிருந்தாவன் சென்றோம். கூட்டம் அதிகம் எல்லோரும் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்துக் கொண்டிருந்தார்கள், வேறு வழியில்லை புரோக்கர் ஒருவரை பிடித்து டிக்கெட் வாங்கினோம்.



பார்த்து முடித்து ரூம் போய் சேர்வதுக்குள் லேட்டாகிவிட்டது. ஒட்டல் எல்லாம் மூடி விட்டார்கள், பிறகென்ன அன்றிரவு கையேந்தி பவன்தான்.

மைசூர்-பெங்களூர் பிலிம் சிட்டி

மறுநாள் காலையில் கிளம்பி ஸ்ரீரெங்கப்பட்டிணம் வழியாக பெங்களூரில் உள்ள பிலிம் சிட்டி கிளம்பினோம், இடையில் திப்பு சுல்தான் கோட்டையை பார்க்க ஆசையாக இருந்தது, ஆனால் குட்டீஸ்கள் வேணவே வேணாம் என்று வண்டியை விரட்டி சரியாக ஒபனிங் டைமுக்கு இன்னோவேட்டிவ் பிலிம் சிட்டி வந்தோம்.

இங்கு உண்மையிலே பெரியவர்களுக்கு ஒன்றிரண்டை தவிர பார்க்க ஏதுமில்லை, குட்டீஸ்களுக்கென்ற உருவாக்கப்பட்ட தனித் தீவு. அருமையாக இருந்தது. கட்டணம் பேக்கேஜ் இரண்டு வகையாக உள்ளது, ஒன்று நீர் விளையாட்டு இல்லாமல் உள்ளது ரூபாய் 299, மற்றொன்று நீர் விளையாட்டுடன் கூடியது ரூபாய் 499. நீர் விளையாட்டு வேண்டாமென்று பேசிக் பேக்கேஜில் நுழைந்தோம், இதில் பெரியவர்களுக்கு ரிப்பிலீஸ் மியூசியம், மிர்ரர் மேஸ் மற்றும் குகை போன்றவைகள் அருமை, மற்றவை எல்லாம் குட்டீஸ்களுக்கு மட்டும்தான்


















ஒருநாள் போதவில்லை, இரவாகிவிட்டதால் மேற்கொண்டு பெங்களுரை சுற்றி பார்க்க டையமில்லை, அன்றிரவே தேனி திரும்பி விட்டோம், மொத்தத்தில் குழந்தைகளுக்காக டூர் செல்வதென்றால் இதுதான் சாய்ஸ்...

வருகைக்கு நன்றி!

...