Wednesday, April 21, 2010

தீயும் பனியும்


காதல்
ஒன்று
மட்டும்தான்
தீயையும்
பனியையும்
ஒரே நேரத்தில்
திங்கச் சொல்கிறது

நம் விழிகளுக்கு
விருந்து
வைக்க வேண்டும்
அவைகள்தானே
வழி திறந்து
விழி மோதச்
செய்தது

கேள்விகளும்
விடைகளும்
நமக்குள்
தினமும்
பார்வைகளாலே

சந்திக்கும்
வேளைகள்
நமக்கு
சுப முகூர்த்தங்கள்
அதனாலேயே
தினமும்
விருந்து
படைக்கின்றன
இதயங்கள்

இந்த
காதல்
நம் பருவ
வானில்
வந்த
துருவ நட்சத்திரம்

வாழ்க்கையில்
வசந்தங்களின்
கையெழுத்து
நாமிருவரும்
எதிரெதிரே
தோன்றும்
போது


என்
ஐந்து
விரல்களின்
இடைவெளியை
உன் விரல்கள்
நிரப்ப
பற்றிக் கொண்டது
நம் காதல்

என்னிலிருந்த
உன்னையும்
உன்னிலிருந்த
என்னையும்
காட்டி
நம்மை
படைத்துச் சென்றது
இந்த காதல்

இப்படிக்கு
-நாமிருவரும்

Sunday, April 4, 2010

காதல் பசி


நிறைய
தடவை
கொள்ளை
போயிருக்கிறேன் - உன்
கொஞ்சும்
விழிகளால்

உன்னை பாராமல்
நிலையாக
நிற்கத்
திரணியில்லாமல்
தடுமாறுகின்றன
எனது கால்கள்

வழியில்
உன்னை
காணாது
அழுது
புரண்டு
கெஞ்சுகின்றன
எனது விழிகள்

உன்னை
எப்போதும்
பருகத்
தயாராய்
இருக்கின்றன
எனது பரிதாப
பார்வைகள்

உன் கைவிரல்
கோர்க்காது
காய்ந்து
கிடக்கின்றன
எனது கைகள்

நீ சாயாது
வெற்றுத்
தரிசாக
வெம்பிக் கிடக்கிறது
என் நெஞ்சம்

உன் குரல்
கேட்காமல்
சிதலமடைந்து
போயிருக்கிறது
என் செவிகள்

உன்
பெயர்
சொல்லாது
இறுகிப்
போயிருக்கிறது
என் இதழ்கள்

மொத்தத்தில்
உன் நிழல்
விழவில்லை
நிஜமாகவே
இடிந்து
போயிருக்கிறது
என் இதயம்

-இப்படிக்கு
காத்திருப்பவன்

வருகைக்கு நன்றி!

...