Monday, October 18, 2010

விளையாடும் காதல்


சித்ரவதைகளிலே
வேண்டி
விரும்பக்
கூடியது
இந்த
காதல்
மட்டும்தான்

பார்க்கும்
முன்பு
பல கேள்விகள்
பார்த்த
பின்பு
விழி வேள்விகள்

உன் அழகு
உனக்கு
கெபாசிட்
இதனால்
நிறைய தடவை
போனது
என் டெபாசிட்

கஜினி
படையெடுத்தான்
கொள்ளையடித்தான்
நானும்
படையெடுத்தேன்
ஆனால்
கொள்ளையடித்தாய்

உன்னை
கண்களால்
களைவாடிய
பொழுதுகள்
கதை சொல்லும்
நீ சென்ற
பிறகு
தனித்து விட்ட
அந்த நிமிடம்
கொல்லும்

கத்தியெடுத்தவனுக்கு
கத்தியாலே
சாவு
தினமும்
சாகுறேன்
உன்
விழியாலே
என் அருமை
விழியாளே

வாலிலே
பட்டாசு
வைத்த
காளை
இந்த நிலமையில்
இப்போது
என் மூளை

படிக்காமலே
உன்னிடம்
நிறைய
அரியர்ஸ்
நான் அனுப்பிய
கடிதச் சுமை
தாங்காது
திணறியது
கூரியர்ஸ்

தும்பியை
பிடிக்கும்
துறுதுறுப்பு
இந்த
அம்பியை
கண்டாலே
ஏன் வெறுப்பு

உனக்காக
பொய் சொல்வேன்
சாம்பிள் ஒன்று
உன் தங்கை
குறைவுதான்
உன் அழகில்
கால் பங்கு

-இப்படிக்கு
தூண்டில் போட்டவன்

Tuesday, October 12, 2010

ஆதாம் ஏவாள்


மறந்து
போனார்கள்
மற்றதையெல்லாம்
கேட்டால்
இவர்கள்
காதலர்களாம்

எதை
பற்றியும்
கவலைபடாத
பற்றியதை
மற்றுமே
நினைக்கத்
தெரிந்த
நீரோக்கள்

எத்தனை
செய்வார்கள்
எதனையும்
செய்வார்கள்
ஆனால்
கண்களில்
மட்டும்
கள்ளத்தனம்

முக்காடு
போட்டு
முழு வேகம்
சென்று
பால்கனியில்
அமர்ந்து
படம் பார்க்கும்
பச்சை
காதலர்கள்

வராத
வீரம்
வந்தது
பல தரம்
காரணம்
ஜோடியின்
பார்வை
பூரணம்

கண்டுபிடிப்பதில்
தன்னை
மறப்பதும்
கண்டுபிடித்ததில்
தன்னை
கரைப்பதும்
இவர்களுக்கு
கை வந்த கலை

கை பற்றிச்
செல்கிற போது
இவர்கள்
லேசாவார்கள்
மற்றவர்களுக்கு
கனக்கும்
துடிக்கும்
வார்த்தைகள்
தடிக்கும்

பிறவிப்
பயனை
அடைந்த
ஜோடிகளாம்
முற்றிலும்
காதல்
மழையில்
நனைந்த
கோழிகளாம்

எந்த பிறவி
என்ன சொன்னாலும்
வாசலில்
அதை கழுவி
ஊற்றுவார்கள்
முறைத்தால்
பார்வையால்
கழுவில்
ஏற்றுவார்கள்

காதல்
வகுக்கப்படவில்லை
சொல்லித்தர
முடியாது
வருவது
தெரியாது
வருமுன்
காக்க முடியாது

மொத்தத்தில்
காதலர்கள்
ரசிக்க
ருசிக்க
தனித்து
விடப்பட்டதுதான்
இந்த
பூமித் தீவு

-இப்படிக்கு
நான் யாருனு தெரியாதாக்கும்...

வேறென்ன காதல்தான்!


ஒரே நேரத்தில்
பனியில்
நனைந்து
தீயில் சுட்டு
நீரில் கரைந்து
காற்றில் கலந்த
உணர்வுக்
காதல்

உலகில்
எத்தனையோ
சுடிதார்கள்
யார்
உன்னை
முதலில்
பார்த்தாலும்
மடிவார்கள்

பதினெட்டு
வருடம்
கழித்துதான்
தெரிகிறது
உன்னிடம்
பேசத்தான்
என்னிடம்
உதடுகள்.
வார்த்தைகள்..
வாக்கியங்கள்...

வலி
நிறைந்த
பிரசவங்கள்
குழந்தை ஒன்றுதான்
தாயாய்
என் இதயம்
குழந்தையாய்
காதல்

என் காதல்
அவசரம்தான்
விதைகளை
தூவி விட்டு
உடனே
பூ முளைக்க
வேண்டுகிற
தேனீ போல
நான்

ரசித்து
அனுபவிக்க
அமுதத்தை
விட
பேரமுதமானது
நஞ்சை விட
கொடுமையானது
இந்தக்
காதல்

துப்பாக்கி
இல்லாத
தோட்டாக்கள்
உன்
விழிகள்-அது
தினமும்
துளைத்து
வருவது
என் கண்கள்

-இப்படிக்கு
விழியில் கோர்த்தவன்

Tuesday, September 28, 2010

காதல் இடைவேளை


நாம்
வெறுக்கும்
நிம்மதியான
தற்காலிக
இடைவெளி
நம்
குடும்பத்திற்க்காக

ரசிக்கமுடியுமா!
விரல்களை
வெட்டிப்
போட்டுவிட்டு
டாடா
காண்பிக்கச்
சொல்கிறார்கள்

இதயங்கள்
இடம்
மாறியது
தெரிந்த
போது
தடம்
மாறியதாக
சொல்கிறார்கள்

விழிகள்
ஏற்றுக்
கொண்டு
இடியாய்
இறங்கியது
காதல் வேர்கள்
நம் இதயத்தில்

வேர்களின்
வேகத்திற்க்கு
நம் கண்ணீர்
அதை
விழ வைக்க
இப்போது
வெண்ணீர்

நொடியிலும்
நிமிடத்திலும்
தற்போது
வாழ்க்கை-
காரணம்
இறந்த காலத்தின்
நம்பிக்கை

உறவை
பிரித்தால்
தனிமை
மிஞ்சும்
காதல்
உணர்வை
பிரித்தால்
உடல்தான்
மிச்சம்

சில
நாட்களாக
அமாவசையை
அனுபவிக்கும்
நம் காதல்
மனங்கள்
ஏங்கும்
பெளர்ணமிக்காக

இந்த
கோப
விடுமுறை
முடியும் வரை
நம் காதல்
கொடி
அரைக் கம்பத்தில்
பறக்கட்டும்

இந்த
சின்ன
இடைவெளியில்
காய்ந்து
போனது
இதயம் மட்டுமல்ல
இதழ்களும்தான்...

-இப்படிக்கு
ஈர்க்கும் எதிரெதிர் துருவங்கள்

Sunday, September 19, 2010

இதுமட்டும் தானா?


நிறைய
சேதாரம்
இருக்காத
பின்னே
நீ திரும்பி
பார்த்த
பிறகும்

உன்
பார்வையின்
தொடர்பும்
துண்டிப்பும்
கிரகிக்கும்
என் கண்
செல்கள்

அடிக்கடி
நீ யோசிக்கும்
போது
உன் ஆட்காட்டி
விரலை
பார்த்து
நிறைய
பொறாமை

பகலிலே
தெரியும்
முழு நிலவு
விழித்தாலே
வருவது
உன்
கனவு

தூறலில்
நான்
வளைத்த
வானவில்
உன்னை
எப்போது
அடைகாத்திருப்பது
என் மனதில்

சுகமான
வேதனைகள்
குத்தும்
உன் புருவ
வில்லில்
பிறக்கும்
தரமான
பார்வை
அம்புகள்

உலகில்
எத்தனையோ
உருவங்கள்
இருந்தும்
நமக்குள்
மட்டும்
தோரணங்கள்
தெரியுமா
காரணங்கள்!!!?

-இப்படிக்கு
திரும்பிப்பார்த்ததில் தீய்க்கு இரையானவன்

ஜென்ம ஜென்மமாய்


உன்னை
நினைத்து
வரையும்
வரிகள்
பேனாவிற்கு
பிரசவ
நேரங்கள்

இந்த
காதல்
மட்டும்தான்
நினைத்த
நேரத்தில்
விண்ணை
முட்ட
பற்றி நிற்க்கிறது

பற்றி
எரிகின்ற
இந்த
திராவகத்
தீயில்
முற்றும்
உணர்ந்த
ஞானி

உன்னை
கண்ட
நிமிடத்தில்
உடனே
பூக்கிறது
தண்ணீர்
பூக்கள்
என் நெற்றியில்

பார்வை
திருட்டை
பார்த்ததற்க்கு
நீயே கொடுத்த
வெக்கத் தண்டனை
ஒன்றும்
அறியாத
கடிபட்ட - உன்
இதழ்கள்

எல்லாரும்
தொலைந்து
போனதை
தேடுவார்கள்
நான் மட்டும்
கிடைத்ததில்
தேடிக்
கொண்டிருக்கிறேன்

ஜென்ம
வேண்டுதலுக்கு
கிடைத்த
வரமான
அழகிய
சாபம் நீ

இந்த
காதலுக்காகவே
பிறவிகள்
வேண்டும்
வலிகள்
வேண்டும்
வாழ்க்கை
வேண்டும்

-இப்படிக்கு
காதல் பிறப்பால் உயர்ந்தவன்

Thursday, September 2, 2010

நீயும் நானும்


மேகத்தின்
வேர்வைகளை
மரத்தின்
வேர்கள்
உறுஞ்சும்
உன் விழிகளின்
வேகங்களை
என் பார்வை
உறுஞ்சும்

தப்பிக்கப்
பார்த்தாயோ
இல்லை
தப்பிப்
பார்த்தாயோ
சிக்கிக்
கொண்டது
நானல்லவா

உனக்கே
தெரியாமல்
எனக்குள்
வந்து
சில பூக்களை
நட்டு வைத்துப்
போகிறாய்

நடுக்கிய
வகுடும்
இடுக்கிய
பையும்
வெடுக்கிய
நடையும்
சிதறிய
என்
இலக்கணம்

கை எடுத்து
நாடி தட்டி
சாமி முன்
உக்கி
போட்டு
நீ செய்யும்
விரைவு
தரிசனம்
தப்பாமல்
நானும்
உன்னை நோக்கி

யாருக்குத்
தெரிகிறது
இந்த தத்துவம்
உன் பற்று
இருந்ததால்தான்
உன்னை
பின்பற்றி
வருகிறேன்

உனக்கே
தெரியாத
உன் வீட்டின்
மொத்த மாடி
படிக்கட்டுகள்
எழுதாத
நீ வீசி
எறிந்த பேனா
அடிக்கடி
நீ ஒதுக்கி
விடும் முடிக்கற்றை
எனக்குத்
தெரியும்

என்னை
எப்போதாவது
கண்டிப்பாக
உனக்குத்
தெரியும்
என்ற
நம்மிக்கையில்...

-இப்படிக்கு
உனக்கு மட்டும் தபால்காரன்

Thursday, July 15, 2010

இது ”A" கவிதையல்ல


யாவரின்
சுகமான
நேரம்தான்
நித்திரை
பலரின்
தூக்கத்தை
கெடுத்தது
நித்தி வந்த
திரை

தலையிலே
முண்டாசு
கழுத்திலே
ருத்ராட்சை
மடியிலோ
திராட்சை

ஆன்மீகம்
சொல்லும்
பெண்முகம்
அரவணைப்பில்
கம்பீரம்
போய்விட்டது
உன் தரம்

எரியிற
தீயில்
கண்மூடி
தியானம்
தவம் கலைந்து
கதவை
மூடி
ஞானம்

பித்துக்கு
வாக்குச்
சொல்லும்
நித்து
இப்போ
எங்கே
போச்சு உன்
சத்து

நிம்மதியை
தொலைத்தவந்தான்
அங்கே
வருகிறான்
நீ போட்ட
களியாட்டத்தால்
நொந்து
போய்கிறான்

நீ ஒரு
படைப்பாளிதான்
பிரசங்கம்
நடத்தினாயோ
பிரசவங்கள்
நடத்தினாயோ

ரஞ்சிதாவின்
நாயகனே
நாறிப் போய்விட்டாய்
இனி நீ
செண்டு
போட்டு
நடந்து
வந்தாலும்
செத்த
பிணம்தானே

இப்படிக்கு
-இனிமேல் காவி நிறத்தில் ஆடை அணியாதவன்

Friday, July 9, 2010

காதல்னா சும்மாவா?


நிறைய
சந்தோஷங்கள்-
எனக்கு
என்பது
நமக்கான
பிறகு

விழி
கோர்க்காது
காய்ந்து
போனது
கண்கள்
மட்டுமல்ல
கனவும்தான்

விரல்
கோர்க்காது
சோர்ந்து
போனது
கரங்கள்
மட்டுமல்ல
நினைவும்தான்

உன்
தலை படாமல்
தாழ்ந்து
போனது
தோழ்கள்
மட்டுமல்ல
வாழ்வும்தான்

நீ சிந்திய
வெளிச்சப்
பூவில் தேன்
தேடும்
தேனீ
நான்

உன்
விழிகள்
போடும்
பந்தை
பாய்ந்து
பிடிக்கும்
தோனி நான்

நான்
அணு அணுவாய்
ரசிக்கிறேன்
காரணம்
உன் கண்கள்
பொக்ரான்கள்

நீ மெளனித்த
போது
உதடுகள்
மோதி
இடி இடித்தது
என் இதயத்தில்

உன்
இதமான
காதலால்
சுகமான
ஒரு
பிறவி...

இப்படிக்கு
- மூன்றெழுத்தில் மூச்சை வைத்தவன்

Monday, June 28, 2010

இனி நடராஜாதான்!


வளைகுடாவில்
பிறந்த
வெளிநாட்டு
மருமகள்
இந்தியாவில்
புகுந்தாள்
இடியாக

பிறக்குமிடம்
மதிக்கவில்லை
இவள்
புகுந்த இடம்
இன்னும் இவளை
மறக்கவில்லை

மாடு விலை
முப்பது
என்றால்
சாட்டை விலை
அறுபது
சாட்டயாய் வரி
மாடாய்
வெள்ளை
மருமகள்

பேரல்தான்
தூறல் போட்டு
இப்போது
காரமாய்
பேரம்
பேச வைக்கிறது

தினம்
தினம் ஒரு
விலை
இதனால்
எங்கள் நிம்மதி
கொலை

இவள்
புகுந்தாள்
வண்டி விளையாடும்
இவளுக்கு
வாழ்க்கையே
விளையாட்டாய்

குதிரையேற்றம்
யானையேற்றம்
உற்சாகம்தானே
உன்னால்தானே
இந்த தள்ளாட்டம்
காரணம்
விலையேற்றம்

முன்பெல்லாம்
நிம்மதியாய்
ஒரு பயணம்
ஒரு கட்டு
வைக்கோல்
கொஞ்சம்
புண்ணாக்கு

இப்படிக்கு
-மைலேஜுக்காக வெயிட் குறைத்தவன்

Friday, June 18, 2010

செந்தமிழ் தந்த தானம்


பிறந்து
தவழ்ந்த
போதும்
தத்தி
நடந்த
போதும்
அடையவில்லை
ஏதும்
அடைந்தேன்
பிறவிப்
பயனை
தமிழை
பருகும் போது

விருந்துக்கும்
மருந்துக்கும்
வந்தாரை
வாழவைக்கும்
அழகிற்க்கும்
தங்கத்
தரணியே
சொக்கி
நிற்கும்

சங்கம்
வளர்த்த
நாடே
தமிழால்
அங்கம்
குளிர்ந்த
நாடே

வாழ
ஆரம்பம்
பிராட்டி
ஆத்தி சூடியாய்
வாழ்க்கைக்கு
வள்ளுவர்
ஈரடி குறளாய்
தந்தது
நம் தழித்தாய்

கண்ணிற்க்கு
கருவிழி
ஆதாரம்
கன்னியருக்கு
சிலப்பதிகாரம்
இதை நமக்கு
தந்தது
தமிழ் மொழி
தானம்

உயிர்
மூச்சிலே
கலந்தும்
செஞ்சோற்றிலே
பிசைந்தும்
பண்பாட்டிலே
கலந்தும்
அள்ளிப்
பருகுவோம்
என்றும்
அன்னைத்
தழிழை

என்றும்
வாழ்க தமிழ்
வாழிய
தமிழர்கள்
செழிக்கட்டும்
தமிழ் நாடு

Monday, June 14, 2010

பள்ளி மடல்


பரிட்சையில்
பாஸுன்னு
மகனுக்கு
பள்ளி மடல்
எனக்கு
முன்னரே
வந்தது
கட்டண மடல்

சமச்சீராம்
கலர் கலராய்
புத்தகங்கள்
சம்மட்டி
அடியாய்
கட்டணங்கள்

ஒன்றாம்
வகுப்பு
ஓறாயிர
விளக்கங்கள்
கொட்ட கொட்ட
எழுத்தில்
கட்டணங்கள்

குதிரையேற்றம்
நீச்சல்
குருப் டான்ஸ்
சோலே நடனம்
கிடார்
மிருதங்கம்
பக்க வாத்தியங்கள்
பக்காவாய் கட்டணங்கள்

பள்ளி நிதி
பருவ நிதி
பாடங்கள்
எடுக்க நிதி
சாப்பாட்டு
கட்டண நிதி
இதுக்கெல்லாம்
ஏது நீதி

ஒத்தையிலே
போகையிலே
கத்தி காட்டி
மிரட்டுவது
போல்
ஜுன் மாசம்
வந்தாலே
ஜீரம் வருது
சாமிகளே

கரங்களிலே
கசங்கிய
கரன்சி
கட்டி
பில்லு கேட்டா
பல்லு போகுதே

பொதி மூட்டை
சுமக்கும்
பிள்ளையே
நீ நிமிரத்தான்
தாங்கி கொண்டேன்
இந்த
தொல்லையே

இப்படிக்கு
-பிள்ளை பெற வேண்டாதவன்

Wednesday, April 21, 2010

தீயும் பனியும்


காதல்
ஒன்று
மட்டும்தான்
தீயையும்
பனியையும்
ஒரே நேரத்தில்
திங்கச் சொல்கிறது

நம் விழிகளுக்கு
விருந்து
வைக்க வேண்டும்
அவைகள்தானே
வழி திறந்து
விழி மோதச்
செய்தது

கேள்விகளும்
விடைகளும்
நமக்குள்
தினமும்
பார்வைகளாலே

சந்திக்கும்
வேளைகள்
நமக்கு
சுப முகூர்த்தங்கள்
அதனாலேயே
தினமும்
விருந்து
படைக்கின்றன
இதயங்கள்

இந்த
காதல்
நம் பருவ
வானில்
வந்த
துருவ நட்சத்திரம்

வாழ்க்கையில்
வசந்தங்களின்
கையெழுத்து
நாமிருவரும்
எதிரெதிரே
தோன்றும்
போது


என்
ஐந்து
விரல்களின்
இடைவெளியை
உன் விரல்கள்
நிரப்ப
பற்றிக் கொண்டது
நம் காதல்

என்னிலிருந்த
உன்னையும்
உன்னிலிருந்த
என்னையும்
காட்டி
நம்மை
படைத்துச் சென்றது
இந்த காதல்

இப்படிக்கு
-நாமிருவரும்

Sunday, April 4, 2010

காதல் பசி


நிறைய
தடவை
கொள்ளை
போயிருக்கிறேன் - உன்
கொஞ்சும்
விழிகளால்

உன்னை பாராமல்
நிலையாக
நிற்கத்
திரணியில்லாமல்
தடுமாறுகின்றன
எனது கால்கள்

வழியில்
உன்னை
காணாது
அழுது
புரண்டு
கெஞ்சுகின்றன
எனது விழிகள்

உன்னை
எப்போதும்
பருகத்
தயாராய்
இருக்கின்றன
எனது பரிதாப
பார்வைகள்

உன் கைவிரல்
கோர்க்காது
காய்ந்து
கிடக்கின்றன
எனது கைகள்

நீ சாயாது
வெற்றுத்
தரிசாக
வெம்பிக் கிடக்கிறது
என் நெஞ்சம்

உன் குரல்
கேட்காமல்
சிதலமடைந்து
போயிருக்கிறது
என் செவிகள்

உன்
பெயர்
சொல்லாது
இறுகிப்
போயிருக்கிறது
என் இதழ்கள்

மொத்தத்தில்
உன் நிழல்
விழவில்லை
நிஜமாகவே
இடிந்து
போயிருக்கிறது
என் இதயம்

-இப்படிக்கு
காத்திருப்பவன்

Monday, March 8, 2010

விழுந்து விட்டேன்

நீ
சிலந்திதான்
ஆனால்
இந்த வலை
நானே விரித்து
நானே விழுந்து
கொண்டது

சாகத்
தயாராய்
இருக்கின்றன
எனது
சிகரெட்டுகள்
உன் விழி
வீச்சுக்கு

முழுவதும்
நனைந்து
போய்விடுகிறேன்
உன் துப்பட்டாவின்
தூறல்களால்

உன்னை
ஒரு முறை
பார்த்த பிறகு
மறந்து போய்
நின்றேன்
அடுத்தவர்
அறையில்

என் பார்வை
எனும்
கேள்விகளை
திருத்தி
எறிந்து
விடுகின்றன
உன் விழிகள்

தேர்வுகளை
மட்டும்
எழுதிக்
கொண்டு
வருடங்கள்
மட்டுமே
பாஸாகிறது

நுனிக் கரும்பில்
இனிப்பில்லையா
கேட்க
முடியாது
உன்
நகங்களிடம்

திருட்டு
கொடுத்த
நானே
இப்போது
திருடிக்
கொண்டிருக்கிறேன்

-இப்படிக்கு
உன் வலையில் விழுந்தவன்

Wednesday, March 3, 2010

பிடிக்கும்


எனக்கு
பிடித்தவைகள்
எல்லாம்
எப்போதும்
உனக்குள்

எனக்கு
பிடிக்கும்
என்னை
சுட்டிக் காட்டிய
உன் விரல்கள்

எனக்கு
பிடிக்கும்
ஓரக் கண்ணால்
என்னை
படம் பிடித்த
உன் கண்கள்

எனக்கு
பிடிக்கும்
வாஞ்சையோடு
தடவிப் போகும்
உன் கூந்தல்

எனக்கு
பிடிக்கும்
என்னை
பார்த்து
திரும்ப
உதவிய
உன் கழுத்து

எனக்கு
பிடிக்கும்
என்னை
நோக்கி
செலுத்திய
உன் கால்கள்

எனக்கு
பிடிக்கும்
என் பெயர்
சொல்ல
உதவிய
உன் உதடுகள்

எனக்கு
எப்போதும்
பிடிக்கும்
என்னை
நினைத்து
கொண்டிருக்கும்
உன் மனதை

இப்படிக்கு
-எனக்குள் இருப்பவளின் உரிமையாளன்

Thursday, February 18, 2010

உனக்குள் புதைந்து போனவன்


என்
எண்ணங்கள்
மூலம்
உன், என்
நிழற்படங்கள்

என்
இதயத்தை
சுருட்டிவிட்டாய்
அதனால்தான்
இந்த இமேஜில்
சுருக்கங்கள்

இணைந்த
இதயங்கள்
பேசுவதால்
இங்கு
இதழ்களுக்கு
மூடு விழா

இதய வரிகளை
இடைவிடாது
வாசித்து
சிவந்து
போனது
உன் இதழ்கள்

நீ விடும்
காதல்
மூச்சை
சுவாசித்தே
இறுகிப் போனது
என் இமைகள்

என்
தலைவிதி
சூரியக்
கதிர்களை
தேடிக் கொண்டிருக்கும்
உன் இமை
பூக்கள்

பட்டுப்
போன
என் நினைவுக்
கம்பிகளை
மீட்டிக் கொண்டிருக்கும்
உன் விரல்கள்

உன்னில்
அடங்கி
இருக்கிறேன்
என்றும்
உனக்குள்
புதைந்து
போகின்றேன்

-இப்படிக்கு
உன்னால் உயிர் பெற்றவன்

Tuesday, February 16, 2010

காதலித்(தேன்)


உன் விழி
படிக்கட்டில்
பயணிக்கிறேன்
உன் பார்வை
அறிந்தும்
அறியாமலும்

உன் கிட்டப்
பார்வையால்
கெட்டுப்
போயிருக்கிறது
என்
இதயம்

தினமும்
உன்னை
கண்டவுடன்
என் விழிகள்
மேயந்து வர
கிளம்புகிறது

வீழ்வதும்
எழுவதும்
தொடர்கின்றன
நாமிருவரும்
விழிகளால்
மோதும் போது

எதிரெதிர்
துருவங்கள்
ஒன்றையொன்று
ஈர்க்கும் தத்துவம்
உண்மையாகிப்
போனது
நம் புருவங்களால்

உன் இதழ்கள்
பிரிந்து
சேர்ந்து
வார்த்தைகளாகி
வந்து
என் இதயத்தை
காய வைக்கிறது

உன்
கூர்மையான
கூந்தலை
பார்க்கும் போது
சில சமயம்
குருடாகி விடுகிறது

தினமும்
ஊனமாகிப்
போகிறேன்
உன்
நடை அழகை
பார்த்து

சில சமயம்
விரதமிருக்கின்றன
எனது விழிகள்
ஜன்னலோரம்
உன்
விரல்கள் காணாது

தேனென்றால்
வண்டு
பூவை
சுற்ற வேண்டும்
நீ வேண்டுமென்றாலும்
நானும்...

இப்படிக்கு
-உன் கடைகண்ணால் ஆசிர்வாதிக்கப்பட்டவன்

Wednesday, February 10, 2010

தேவைதான் இது எனக்கு!


நீ
சிந்துகின்ற
பார்வையை
எண்ணி
சிலிர்த்துப் போனது
என் மனது

நீ துடைத்துவிட்ட
வேர்வை
துளிகள்
இப்போது
எனக்குள்
முளைத்துவிட்டன

உன் கண்கள்
எனும் தீக்குச்சி
எப்போது
என் பார்வை
பட்டு
பதத்துப் போகும்

நீ உன்
கை பதித்த
இடங்களின்
கை ரேகைகளை
நகலெடுக்கும்
நான் ஒரு
குற்றவாளி

உன் வரவுக்காக
கடைகளும்
என்
கடைக் கண்ணும்
காத்திருக்கின்றன

என் வார்த்தைகளை
தடுக்கின்றன
உன்னால்
ஊனமாக்கி
ஒதுக்கப்பட்ட
உன்
காதோர
முடிக் கற்றைகள்

கோபமோ
முறைப்போ
வசவோ
கசந்த
வார்த்தைகளோ
இதில்
ஏதாவது ஒரு
ஆயுதத்தை
எய்து விடு

திரும்பிப் பார்ப்பது
தீய பழக்கமல்ல
இதை
தினமும்
சொல்கிறேன்
உன் பின்னால்
வந்து

நாள் முழுவதும்
உன் மீது
போர்
தொடுத்து
என்னை
சிறை கொடுக்கிறேன்

வழக்கமில்லை
வருந்துவதற்க்கு
இந்த வலிகள்
வேண்டும்
உன்னோடு
வாழ்வதற்க்க

- இப்படிக்கு
நிராயுதபாணி ஆனவன்

Monday, January 18, 2010

போர்க்களம்


தினமும்
இரவில்
அதுவும்
கனவில்
களம்
காண்கிறேன்

விடியலில்
நீ விதைத்த
காலடி
விதைகளுக்கு
தினமும்
நீருற்றுகிறேன்

நீ கைவீசி
நடந்து
விட்டுச் சென்ற
இடத்தில்
இளைப்பாறுகிறேன்

எதிரே தூசிக்
காற்று
வந்தது
கண்களை
மூடிக் கொண்டாய்
பிறகு ஏன்
நான் வரும்
போதும்...?

நீ பார்வை
இடும்
இடங்களில்
நிறைய
தடவை
என்னை
வலுக்கட்டாயமாக
திணித்திருக்கிறேன்

உன் யதேச்சையான
விழிக் கதிர்கள்
கூட
என் மேல்
விழாதவாறு
மிகக்
கவனமாய் நீ

எனது
இதய செல்
உன் பார்வை
எனும் சிக்னல்
இல்லாமல்
செயலிழக்கிறது

நிமிர்ந்த நடை
நேர் கொண்ட
பார்வை
சில
சமயங்களில்
நீ பாரதியை
மறந்து போக
வேண்டும்

உனக்குத்
தெரியாமல்
ஒற்றை
ஆளாய் உன்னுடன்
போரிட்டுக்
கொண்டிருக்கிறேன்

நேருக்கு
நேர் - நீ
என் விழி
மோதி
நாமிருவரும்
போர்க்களம்
காணும் நாள்
வெகு தொலைவில்
இல்லை


-போரில் புறமுதுகு காட்டாதவன்

வருகைக்கு நன்றி!

...