Tuesday, September 28, 2010

காதல் இடைவேளை


நாம்
வெறுக்கும்
நிம்மதியான
தற்காலிக
இடைவெளி
நம்
குடும்பத்திற்க்காக

ரசிக்கமுடியுமா!
விரல்களை
வெட்டிப்
போட்டுவிட்டு
டாடா
காண்பிக்கச்
சொல்கிறார்கள்

இதயங்கள்
இடம்
மாறியது
தெரிந்த
போது
தடம்
மாறியதாக
சொல்கிறார்கள்

விழிகள்
ஏற்றுக்
கொண்டு
இடியாய்
இறங்கியது
காதல் வேர்கள்
நம் இதயத்தில்

வேர்களின்
வேகத்திற்க்கு
நம் கண்ணீர்
அதை
விழ வைக்க
இப்போது
வெண்ணீர்

நொடியிலும்
நிமிடத்திலும்
தற்போது
வாழ்க்கை-
காரணம்
இறந்த காலத்தின்
நம்பிக்கை

உறவை
பிரித்தால்
தனிமை
மிஞ்சும்
காதல்
உணர்வை
பிரித்தால்
உடல்தான்
மிச்சம்

சில
நாட்களாக
அமாவசையை
அனுபவிக்கும்
நம் காதல்
மனங்கள்
ஏங்கும்
பெளர்ணமிக்காக

இந்த
கோப
விடுமுறை
முடியும் வரை
நம் காதல்
கொடி
அரைக் கம்பத்தில்
பறக்கட்டும்

இந்த
சின்ன
இடைவெளியில்
காய்ந்து
போனது
இதயம் மட்டுமல்ல
இதழ்களும்தான்...

-இப்படிக்கு
ஈர்க்கும் எதிரெதிர் துருவங்கள்

Sunday, September 19, 2010

இதுமட்டும் தானா?


நிறைய
சேதாரம்
இருக்காத
பின்னே
நீ திரும்பி
பார்த்த
பிறகும்

உன்
பார்வையின்
தொடர்பும்
துண்டிப்பும்
கிரகிக்கும்
என் கண்
செல்கள்

அடிக்கடி
நீ யோசிக்கும்
போது
உன் ஆட்காட்டி
விரலை
பார்த்து
நிறைய
பொறாமை

பகலிலே
தெரியும்
முழு நிலவு
விழித்தாலே
வருவது
உன்
கனவு

தூறலில்
நான்
வளைத்த
வானவில்
உன்னை
எப்போது
அடைகாத்திருப்பது
என் மனதில்

சுகமான
வேதனைகள்
குத்தும்
உன் புருவ
வில்லில்
பிறக்கும்
தரமான
பார்வை
அம்புகள்

உலகில்
எத்தனையோ
உருவங்கள்
இருந்தும்
நமக்குள்
மட்டும்
தோரணங்கள்
தெரியுமா
காரணங்கள்!!!?

-இப்படிக்கு
திரும்பிப்பார்த்ததில் தீய்க்கு இரையானவன்

ஜென்ம ஜென்மமாய்


உன்னை
நினைத்து
வரையும்
வரிகள்
பேனாவிற்கு
பிரசவ
நேரங்கள்

இந்த
காதல்
மட்டும்தான்
நினைத்த
நேரத்தில்
விண்ணை
முட்ட
பற்றி நிற்க்கிறது

பற்றி
எரிகின்ற
இந்த
திராவகத்
தீயில்
முற்றும்
உணர்ந்த
ஞானி

உன்னை
கண்ட
நிமிடத்தில்
உடனே
பூக்கிறது
தண்ணீர்
பூக்கள்
என் நெற்றியில்

பார்வை
திருட்டை
பார்த்ததற்க்கு
நீயே கொடுத்த
வெக்கத் தண்டனை
ஒன்றும்
அறியாத
கடிபட்ட - உன்
இதழ்கள்

எல்லாரும்
தொலைந்து
போனதை
தேடுவார்கள்
நான் மட்டும்
கிடைத்ததில்
தேடிக்
கொண்டிருக்கிறேன்

ஜென்ம
வேண்டுதலுக்கு
கிடைத்த
வரமான
அழகிய
சாபம் நீ

இந்த
காதலுக்காகவே
பிறவிகள்
வேண்டும்
வலிகள்
வேண்டும்
வாழ்க்கை
வேண்டும்

-இப்படிக்கு
காதல் பிறப்பால் உயர்ந்தவன்

Thursday, September 2, 2010

நீயும் நானும்


மேகத்தின்
வேர்வைகளை
மரத்தின்
வேர்கள்
உறுஞ்சும்
உன் விழிகளின்
வேகங்களை
என் பார்வை
உறுஞ்சும்

தப்பிக்கப்
பார்த்தாயோ
இல்லை
தப்பிப்
பார்த்தாயோ
சிக்கிக்
கொண்டது
நானல்லவா

உனக்கே
தெரியாமல்
எனக்குள்
வந்து
சில பூக்களை
நட்டு வைத்துப்
போகிறாய்

நடுக்கிய
வகுடும்
இடுக்கிய
பையும்
வெடுக்கிய
நடையும்
சிதறிய
என்
இலக்கணம்

கை எடுத்து
நாடி தட்டி
சாமி முன்
உக்கி
போட்டு
நீ செய்யும்
விரைவு
தரிசனம்
தப்பாமல்
நானும்
உன்னை நோக்கி

யாருக்குத்
தெரிகிறது
இந்த தத்துவம்
உன் பற்று
இருந்ததால்தான்
உன்னை
பின்பற்றி
வருகிறேன்

உனக்கே
தெரியாத
உன் வீட்டின்
மொத்த மாடி
படிக்கட்டுகள்
எழுதாத
நீ வீசி
எறிந்த பேனா
அடிக்கடி
நீ ஒதுக்கி
விடும் முடிக்கற்றை
எனக்குத்
தெரியும்

என்னை
எப்போதாவது
கண்டிப்பாக
உனக்குத்
தெரியும்
என்ற
நம்மிக்கையில்...

-இப்படிக்கு
உனக்கு மட்டும் தபால்காரன்

வருகைக்கு நன்றி!

...