Wednesday, September 21, 2011

அலைகள் ஒய்வதில்லை

கண்டும்
காணாது
நீ செல்ல
ஒவ்வொரு
நாளும்
பிறந்து
நிற்கிறேன்
உனக்காக

முடியழகை
பார்த்து
நிற்ப்பாய்
என சீவி ஒருநாள்
மறு நாள்
சீவாமல்

மீசையிலே
ஆசை வைப்பாய் என
விண்ணை பார்த்து
ஒரு நாள்
மண்ணை பார்த்து
மறு நாள்

சட்டையை
சட்டை
செய்வாய் என்று
தேய்த்து
ஒருநாள்
தேய்க்காமல்
கசங்கி
மறு நாள்

நீ வரும்
பஸ்ஸில்
பேச்சிலே
வசப்படுவாய்
என பட்டிமன்ற
பேச்சாளாராய்
ஒரு நாள்
மறு நாள்
ஊமையாய்

வேட்டி
பிடிக்கும்
என்று
விவசாயியாய்
ஒரு நாள்
சாப்ட்வேர்
என்ஜினியராய்
மறுநாள்

இத்தனை
செய்தும்
தெரிந்து
கொள்வேன்
கவனமாக
உனக்கு
எது பிடிக்கும்
என்று

எதனை
செய்தால்
பிடிக்கும்
என்று சொல்லிவிடு
என்னவளே
என்னை
பிடிக்கும் என்று

கடல் நீர்
தீர்ந்து போகும்
கண் விழியே
என்றும்
தீராது உன் மேல்
என் காதல்
அலைகள்

இப்படிக்கு
- கஜினி முகம்மதுவின் அண்ணன்

வருகைக்கு நன்றி!

...