Sunday, December 6, 2015

வெள்ளம்



தண்ணீர் பஞ்சம்
இன்று தண்ணீரால்
அனைவருக்கும்
பஞ்சம்

தேர்தல் பந்திக்கு
முந்தும்
அமைச்சர் படை
வெள்ள சகதிக்கு
பிந்துவது இயற்கைதானே

மழை பெய்வதால்
தண்ணீர் பாக்கெட்டுகள்
மிஞ்சமாகிறது
டாஸ்மாக்கில்

கிழே விழுந்தால்
தூக்கி விடாதவர்களை
என்ன செய்ய முடியும்
அதுபோலத்தான்
இப்போதும்

பார்த்து சாப்பிடுங்கள்
ரொட்டியை
பிஸ்கட்டை
பழங்களை
படத்துடன் அல்ல

படம் போட்டு
வாங்கி பழகிக்
கொண்ட நாமும்
பதறாமல் வாங்கி
வைத்துக் கொள்ளத்தான்
வேண்டும்

நம் வீடை
சுத்தம் செய்ய
அடுத்தவர்
தயவெதற்கு
உழைப்பெதற்கு

சட்டம் கூட
சத்தமாகத்தான்
சொல்லுது
அம்மா அப்பாவை
அனாதையாய்
விட்டால் கைது
அவர்கள்
நம்மளை தாராளமாய்
கைவிடலாம்

நமக்கு நாமே
மக்களுக்குக்காக
நாம் – இப்படி
எல்லா வார்த்தைகளும்
அரசியலாகிப்போனது

தன் கையே
தனக்கு உதவி
இது கொஞ்சம்
பழைய சோறுதான்
ஆனால் உடம்புக்கு
நல்லது

மனதில்
உறுதி வையுங்கள்
திடமாக எழுங்கள்

-இப்படிக்கு 

மழை வந்தால் குடை பிடிக்க முடியாதவன்

Thursday, July 30, 2015

தமிழ்த்தாய்க்கு தலைமகனார்


தமிழ்த் தாய்க்கு
தலைமகனார்
தன்னிகரில்லா
மக்கள் தலைவரானார்

தமிழில் அரிச்சுவடி
வளர்சியில்
அறிவியல்படி
இவரால் உயரப்
பறந்தது இந்தியக் கொடி

வேலைக்காக
வெளிநாடு
செல்லும் போதையில்
விஞ்ஞானத்தை
காட்டி அஞ்ஞானம்
அகற்றிய அற்புதர்

கனவென்றாலே
இயலாமை
அதை களம்
கட்டி இழுத்ததால்
இந்திய இளைஞர்களை
கண்டு வெளிநாடுகள்
பொறாமை

சாதித்த பிறகும்
கூட போதிப்பில
போக ஒரு மனம்
வேண்டும்
பிள்ளைகளுக்கு
ஆசானாய்...
தகப்பனாய்...
தோழனாய்...

கடைக் கோடியில்
உதயமாகி
கண்ணியராய்
வாழ்ந்து
நாட்டுக்கு
உழைத்து
உத்தமரானார்
மக்கள் மனதில்
உரமானார்...

-அய்யா வாழும் போது வாழ்ந்த பெருமை பெற்றவன்

Saturday, July 25, 2015

காதல் செய்ய விரும்புகிறேன்

எத்தனை
பேரை பார்த்திருப்பேன்
அத்தனை
பேரிலும்
உன் முகம்
தெரிந்த நாள்தான்
எனக்குள் காதல்
அறிந்த நாள்

பதிலை
வைத்துக் கொண்டு
கேள்விக்கு
அழைந்தது
பல நாட்கள்
என்னை பார்த்தது
நீ சில நாட்கள்

தினமும் இந்த
கடிகார முட்கள்
மட்டும்தான்
ஒவ்வோரு நொடியும்
என்னுள்
தைத்துக் கொண்டும்
ஓடிக் கொண்டும்
இருந்தது

உப்புக்கு காரம்
உறவுக்கு பாலம்
நட்புக்கு நண்பன்
காதலுக்கு
துணைவன்
அவனேதான்

காதலை
இப்பக்கம்
ஏற்றியும்
அப்பக்கம்
இயற்றியும்
வைத்த
வல்லல்கள்
நமது நண்பர்கள்

அண்ணாச்சி
கடையும்
அம்மா கொடுத்த
வேலைகளும்
நம்மை ஊன்ற
வைத்த ஏணிகள்

ஈசியாய்
சொன்னார்கள்
பஞ்சும் நெருப்புமென்று
பத்த வைக்கத்தான்
ஆகிறது
பல நாட்கள்

பஸ்ஸில்
தியேட்டரில்
முதலில்
தேடுவது
நமக்கு தெரிந்த
முகமா?

காத்திருப்பதில்
கால நேரம்
பார்த்ததில்லை
உன்னை
கரம் பிடிக்காமல்
இருக்கப் போவதுமில்லை

இப்படிக்கு
- காதலை நே(சுவா)சிப்பவன்...










 


வருகைக்கு நன்றி!

...