Saturday, August 20, 2011

காதல் பிச்சை

                                
நித்தமும்           
தேடித்
திரிகிறேன்
உன்
பித்தம்
தலைக்கேறி
சத்தம்
போடாமல்

ஒருமுறை
பார்த்து விட்டாய்
நெஞ்சினிலே
நாத்து
நட்டாய்
நீரூற்றி
வருகிறேன்
அதில் நிதமும்
நீ தேரோட்டி
வருகிறாய்

எப்போதும்
சிரிப்போடு
உன் பார்வை
இது
போக்கும்
எப்போதும் என்
சோர்வை

தலை முடி
கோதி
வருடிடும்
உன் விரல்கள்
அதை
தப்பாது
கைபிடிக்கும்
என் கரங்கள்

என் மீது
பட்டு
நிலை குலையச்
செய்தது உன்
துப்பட்டா
எப்போதும்
என் இதயம்
உனக்கு
பட்டா

தாவணிக்
கனவுகள்
ஆவணியில்
பூர்த்தியாகுமா?
இல்லை
ஆழிப் பேரலையில்
கரைந்து
போகுமா?

இன்னமும்
தொடர்கிறேன்
உன்
புன் சிரிப்பாலே
என் இதயத்தில்
பெரும் பள்ளம்
உன் கண் அரிப்பாலே

காற்றுள்ள போதே
தூற்றிக் கொள்
இந்த காதலன்
சுமார் எனில்
மனதை
தேற்றிக் கொள்
எனை ஏற்றுக் கொள்...

-இப்படிக்கு
காதலியை பிச்சை பெற்றவன்

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை
நன்றாகவுள்ளது..

Sankar said...

நன்றி முனைவர் குணசீலன் அவர்களே

வருகைக்கு நன்றி!

...